நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – கோட்டை நீதிமன்றம் உத்தரவு - Global Tamil Voice உலக தமிழ் குரல்

நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – கோட்டை நீதிமன்றம் உத்தரவு

 


எயார்பஸ் விவகாரம் தொடர்பான பணச்சலவை குற்றச்சாட்டு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, நாமல் ராஜபக்ஷவை 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 3 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக ‘அத தெரண’ நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கின் சாட்சிகளுக்கு எந்தவிதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கக் கூடாது என்பதும் பிணை நிபந்தனைகளில் ஒன்றாக விதிக்கப்பட்டுள்ளது.

About Lanka Theepam